துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு!!

X
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் தி.மு.கழக இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் தி.மு.கழக இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த இளைஞர் அணி மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். வடக்கு மண்டலத்தில் உள்ள 29 கழக மாவட்டங்கள் 91 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் இளைஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிவுறுத்தலின்படி இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில் நெமிலி கிழக்கு ஒன்றியத்திருந்து, கிளை இளைஞரணி நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
