தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
Thanjavur King 24x7 |15 Dec 2025 6:55 PM ISTகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
தஞ்சாவூர், டிச.15- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியதை கண்டித்து நலிவுற்ற விவசாய சங்கத்தினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை திரும்ப பெற வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழை காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தினை 22 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும், நியாய விலை கடைகளில் சர்க்கரைக்கு பதில் அச்சு வெல்லம் வழங்க வேண்டும், பாமாயில் எண்ணெயிக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக நலிவுற்ற விவசாய சங்கத்தினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story



