பூர்வீக சொத்து தகராறில் கொடூர தாக்குதல்!!

பூர்வீக சொத்து தகராறில் கொடூர தாக்குதல்!!
X
பூர்வீக சொத்து தகராறில் கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகாரளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம், முகமதுபேட்டை அருகே உள்ள வில்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது விதவை தாய் சாந்தி என்பவர், பூர்வீக சொத்து தகராறில் தன்னை மற்றும் தனது மகன் யுவராஜியை தாக்கிய முக்கிய குற்றவாளிகள் மீது திமிரி காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் எங்களிடம் வாக்குமூலம் கேட்காமலேயே போலீசார் இஷ்டபடி அவர்களாகவே புகார் தயாரித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அடித்த குற்றவாளிகள் சந்தோசமாக ஊரை சுற்றி திரிந்து வருகின்றனர். அவர்களை இதுவரையிலும் கைது செய்யவில்லை எனக் குற்றம்சாட்டி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், சாந்தி என்பவரின் கணவர் (லேட்) கார்திகேயன் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், அவர் தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கணவரின் தம்பி மாயகிருஷ்ணன் குடும்பத்தினருடன் பூர்வீக சொத்து தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 06.12.2025 அன்று காலை 7 மணியளவில், சாந்தி தனது நிலத்திற்கு சென்றபோது, உறவினரான மணி, சரோஜா மற்றும் நியா அவரின் மகன்கள் கிரி, ஜெயசூர்யா ஆகியோர் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. பொதுவான நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி ரூ.20,000 பெற்றுக்கொண்டதற்கான பங்கைக் சாந்தி கேட்டதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் போது சாந்தி அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் யுவராஜ் ஓடி வந்து தடுக்க முயன்றபோது, அவரையும் குற்றவாளிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் யுவராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், “உங்கள் நிலத்திற்கு இனி வரக்கூடாது, பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தூக்கு மாட்டி சாகுங்கள்” என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து திமிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, CSR No.318/2025 என்ற எண்ணில் சில பிரிவுகளின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், முக்கிய குற்றவாளிகளான கிரி மற்றும் ஜெயசூர்யா ஆகியோரை FIR-ல் சேர்க்கவில்லை என சாந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதனால், தங்களது உயிருக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், குற்றவாளிகள் மீண்டும் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முழுமையான FIR பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story