அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்... ஆர்வமுடன் வாங்கி சென்ற நிர்வாகிகள்!

X
Namakkal King 24x7 |15 Dec 2025 8:05 PM ISTஅதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி பி.எஸ்.மோகன் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தனது விருப்ப மனுவை வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான பி.தங்கமணி மற்றும் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் உடன் இருந்தனர்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டமன்ற பொது தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன. மக்கள் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள் என முனைப்பு காட்டி வருகின்றன.இந்த நிலையில் தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் கொடுப்பதற்கான கால வரம்பை அதிமுக அறிவித்தது. அதன்படி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விருப்பமனுக்கள் பெறப்படுகின்றன. அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி சென்னையில் (டிசம்பர், 15) தொடங்கியுள்ளது.2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி விருப்ப மனு வினியோகத்தை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, இபிஎஸ் இடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.நாமக்கல்லை சேர்ந்த அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி பி.எஸ்.மோகன் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தனது விருப்ப மனுவை வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான பி.தங்கமணி மற்றும் பரமத்திவேலூர் சட்ட மன்ற உறுப்பினர் சேகர், நாமக்கல் மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.*வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வரை மனுக்கள் வழங்கப்படும் நிலையில், பொதுத் தொகுதி, தனித் தொகுதிகளுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மனுக்களை பெற அதிகளவில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனு வழங்கி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் விருப்ப மனுக்களை பெறுகின்றனர்.
Next Story
