ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட நீருந்து நிலையத்தை பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி பார்வையிட்டு, ஆய்வு செய்து பேட்டி

X
Rasipuram King 24x7 |15 Dec 2025 8:36 PM ISTராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட நீருந்து நிலையத்தை பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி பார்வையிட்டு, ஆய்வு செய்து பேட்டி
ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட நீருந்து நிலையத்தை பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி பார்வையிட்டு, மத்திய அரசு அனுப்பும் நிதியை பெறாமல் இருக்கும் தமிழக அரசு, தற்போது ஆதி திராவிட நலத்துறையில் உள்ள பள்ளிகள்,விடுதியில் அத்தனையும் மூட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் V.P.துரைசாமி ராசிபுரத்தில் பேட்டி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 523 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு சுமார் 854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளானது 90% முடிவு பெற்று குடிநீர் ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டுக் குடிநீர் பணிகள் முடிவு பெற்று அதனை சில நாட்களில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ள நிலையில் தற்போது பாஜக மாநில துணைத்தலைவர் துரைசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.446 கோடி பங்கிடாக வழங்கி உள்ளது. மாண்புமிகு பாரத பிரதமர் மோடி 60% நிதியை இந்த திட்டத்திற்கு ஒதுக்கி உள்ளார். சுதந்திரம் பெற்று 80 ஆண்டு காலம் கடந்த பிறகும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் இருக்கக் கூடாது என்பதற்காக தான் மோடி திட்டத்தை கொண்டு வந்துள்ளார். கூட்டுக் குடிநீர் திட்டத்தின் திறப்பு விழாவின் போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள பேருந்து நிலையம் 20 மயில் தூரத்திற்கு தள்ளி கட்டுமான பணியானது நடைபெற்று வருகிறது,அங்கு நீர் தேங்கிய கூடிய இடம், இதனால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பேருந்து நிலையம் தொடர்பாக பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இங்கு உள்ள மாவட்ட ஆட்சியர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அறிக்கை தயாரித்து கொடுத்துள்ளனர் ஆட்சி மாற்றம் நிகழும் போது அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் . பாஜக தமிழகத்தில் கால் ஊன்றாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு, நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் நாங்கள் எதையும் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசு கொடுக்கிற நிதியை கூட பெறாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசு நிதியை கொடுக்கவில்லை என்று கூறி வருகிறார்கள். மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் டெல்லி சென்று இதை கூறுவாரா?. ஆதிதிராவிட நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் அத்தனையும் மூட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது, குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவதற்கு பணம் ஒதுக்கவில்லை மின்சாரம், குளியலறை, அடிப்படை வசதி போன்றவற்றிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நீதியை திருப்பி அனுப்பிய ஒரே அரசு தமிழக அரசு. கரூர் சம்பவத்திற்கு பிறகு பிஜேபியை பற்றி விஜய் பேசாமல் இருப்பதற்கு என்ன காரணம் என போது, அரசியலில் இன்றைக்கு விரோதியாக இருப்பவர்கள் நாளைக்கு நண்பர்களாக மாறுவார்கள் அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது இதுதான் உண்மை. திருப்பரங்குன்றத்தில் உள்ள 6 அடி துணை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அத்துக்கள் என்று கூறுகிறார். எங்கேயாவது 6 அடி அத்துக்கள் இருக்குமா அந்த தூணில் 3 லிட்டர் நெய் ஊற்றி தீபம் ஏற்றும் முறையை நம் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள் . இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் திருப்பரங்குன்றத்தில் திடீரென்று முருகனை வழிபடுவதாகவும் யாரையோ தூண்டி விடுவதாகவும் கூறுகிறார்கள் என தெரிவித்தார்.. இதில் கட்சி நிர்வாகிகள் லோகேந்திரன், அருள், சுகன்யா, குமார், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
