தோகைமலையில் சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி

தோகைமலையில் சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி
X
செர்வைட் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் வழிகாட்டுதல் சிறப்பு கருத்தரங்கம்
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள டி.இடையபட்டி செர்வைட் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் வழிகாட்டுதல் சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடந்தது. செர்வைட் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் அருட்சகோதரி இருதய தெரஸ் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி அ.ச.ஜோ.லூசியாரோஸ், வணிகவியல் துறை உதவிபேராசிரியர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட திட்ட அலுவலர் அருட்சகோதரி மேரிஜோன், அலுவலகக் கண்காணிப்பாளர் அருட்சகோதரி பெல்சி மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இளைய அப்துல் கலாம் விருது பெற்றவர் மற்றும் பன்னாட்டு தன்னம்பிக்கை பேச்சாளர், வின் யுவர் வீக்னஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ஐ.ஜெகன் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் கல்லூரி மாணவிகளின் எதிர்காலம் குறித்து விழிப்புணர்வுகள், இன்று சமூக ஊடகங்களில் நிகழும் தீமைகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ளுதல், சமூகங்களின் மீதான மேலான மதிப்புகளை தங்களை வளர்த்துக்கொள்ளுதல், கல்லூரி மாணவிகள் தனக்கென்று இலட்சியப் பாதைகளை வகுத்துக் கொண்டு அதில் பயணிப்பது, சுய மேம்பாட்டினை மிகுதிபடுத்திக்கொள்ளுதல் போன்ற தலைப்புகளில் எடுத்துக் காட்டுகளுடன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கல்லூரி மாணவிகளை ஊக்கப்படுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அனைத்து மாணவிகளும் உற்சகாத்துடன் காணப்பட்டனர். மேலும் ஒரு இருட்டு உலகில் விழிப்புணர்வுகள் இல்லாமல் வாழ்ந்து வந்த எங்களுக்கு, ஏழை மாணவிகளுக்காக திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் எங்களது செர்வைட் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்பதற்கு ஒரு வாய்ப்புகள் கிடைத்தது மூலம் எங்கள் கல்வி கண்கள் திறந்து உள்ளது. மேலும் எங்களது செர்வைட் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக நடந்த மாணவிகளுக்கான தன்னம்பிக்கை ஊட்டும் வழிகாட்டுதல் சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சியின் வாயிலாக, தங்களது எதிர்காலங்களை நல்ல வழியிலும், தனக்கென்று ஒரு சிறப்பான பாதைகளை உருவாக்கவும், சிறந்த பெண்களாக நம் நாட்டிற்கும், வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் உழைப்பதற்கு பெரும் வழி காட்டுதல்களாக இருந்தது என்று கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி உதவிபேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story