தென்காசி அருகே செல்போன் டவரில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

Tenkasi King 24x7 |16 Dec 2025 7:59 AM ISTசெல்போன் டவரில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செவல்விளை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஜெயக்குமார் வயது 30 தற்போது தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் தாயுடன் குடியிருந்து வருகிறார் இவருடைய தந்தை இறந்த நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் வேலையும் கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது மாலை ஈனா விளக்கு பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவரில் ஏறி அங்கு இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்த தகவலின் பேரில் இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
Next Story
