ராணிப்பேட்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு கண்துடைப்பிற்காக கடைசி ஆண்டில் லேப்டாப் வாங்கி ஏமாற்றும் திமுக அரசு; விழிப்புணர்வு பிரசங்கங்கள்!!

அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு கண்துடைப்பிற்காக கடைசி ஆண்டில் லேப்டாப் வாங்கி ஏமாற்றும் திமுக அரசை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் COLLAGE STUDENTS FUTURE KA LAPTOP NO NO என்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு பிரசங்கங்கள் வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளுக்கு அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் எம் சுகுமார் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம் சி விஜய் ஆனந்த் தலைமையில் மாணவர் அணி சார்பாக கடைசி ஆண்டில் லேப்டாப் வழங்கும் திருட்டு திமுக அரசின் அவல நிலைகளை சுட்டிக்காட்டும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் COLLAGE STUDENTS FUTURE KA LAPTOP என்ற வாசகங்கள் மற்றும் திமுக அரசின் அவலங்களும் அதிமுக அரசின் சாதனைகளும் அடங்கிய துண்டு பிரசங்கங்களை மாவட்ட மாணவரணி செயலாளர் எம் சி விஜய் ஆனந்த் மாணவிகளுக்கு வழங்கினார். மேலும் மாணவிகளுக்கு விழிப்புணர்வை குறித்து விவரங்களை அறிவுரை வழங்கினார். உடன் வாலாஜா மாணவர் அணி நகர செயலாளர் டான் மேத்தா, தனஞ்செயன் மற்றும் கழக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
