மோடியின் சாதனைகளை விளக்கும் ‘ஓரே நாடு ஒரே புத்தகம்’ வெளியீட்டு விழா!!

புதுக்கோட்டையில் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் எழுதிய மோடியின் சாதனைகளை விளக்கும் ‘ஓரே நாடு ஒரே புத்தகம்’ வெளியீட்டு விழா நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்று நிதித்துறை முதல் நீதித்துறை வரை 54 அரசு துறைகளில் அவர் மேற்கொண்ட அதிரடி சீர்திருத்தங்களையும் சாதனைகளையும் விரிவாக விளக்கி முன்னாள் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள “ஒரே நாடு-ஒரே புத்தகம்” பிரதியை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும் ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமியின் தலைவருமான ஏவிசிசி கணேசன் இன்று புதுக்கோட்டையில் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மூவேந்தர் முன்னேற்ற முன்னணி கழகத்தின் மாவட்ட தலைவர் மாரையாப்பட்டி செல்வராஜ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற டெபுடி கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி பாஜக புதுக்கோட்டை மாநகர் முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணியன் லெட்சுமணன் அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மீனாஸ் சிங்கமுத்து தமிழ்நாடு அகமுடையார் மகா சபையின் மாவட்ட தலைவர் அசோக்குமார் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சபரி இளங்கோ பூக்கடை ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மோடியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளுக்கு புதுமையான வடிவம் தந்துள்ளதாக டாக்டர் ஆர் ஜி ஆனந்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
