புதுக்கோட்டை வடக்கு நகரதிமுக வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி பூத் பரப்புரை கூட்டம்!!

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை வடக்கு மாநகரம் பாகம் எண் 118,119 "என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி" செயல்திட்ட கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையில் கழக இலக்கிய அணி துணை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாக நிலை முகவர், பாக குழு உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் ஆகியோருடன் வியூகம் அமைக்கப்பட்டது. பின்னர் வீடு வீடாக சென்று 'திராவிட மாடல்' அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினர். மாநகர அவைத்தலைவர் அ.ரெத்தினம், துணை செயலாளர் மணிவேலன், பொதுக்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான சந்தோஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும் மாமன்ற உறுப்பினருமான செந்தாமரை பாலு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வம், நியமன மாமன்ற உறுப்பினர் தியாகு, மாவட்ட பிரதிநிதிஜெம்ஸ், வட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், மாரியப்பன், பிரேம் ஆனந்த் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
