நாகப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!!

நாகப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!!
X
திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 193 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பதினோராம் வகுப்பு பயிலும் 92 மாணவர்கள், 101 மாணவிகள் என மொத்தம் 193 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் திருக்குவளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை குழு தலைவர் சோ.பா.மலர்வண்ணன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஜெய்குமாரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கே.சரவணன் வரவேற்றார்.நிறைவாக பள்ளி முதுகலை ஆசிரியர் வீ.அருண் நன்றி கூறினார். இந்த விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் மாணவர்களின் கல்வி பயணத்தை எளிதாக்குவதோடு, பள்ளி வருகையையும் அதிகரிக்க உதவும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Next Story