துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது.

துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் நேற்று மர்மமான முறையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையத்தை சுற்றி சுற்றி வந்துள்ளனர். மேலும் அங்கு உள்ள வரக்கூடிய பயணிகளையும் நோட்டமிட்டு உள்ளனர் .அதிலும் குறிப்பாக முதியவர்களிடம் இவர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இதனைப் பார்த்த மற்ற பயணிகள் இவர்களைப் பிடித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். துவரங்குறிச்சி காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது ஊத்துமலை கடங்கநேரியைச் சேர்ந்த அஞ்சலி 23, மற்றொருவர் திருநெல்வேலி சுத்தமல்லியைச் சேர்ந்த லட்சுமி (எ) சாந்தி (எ) பார்வதி 47 என வெவ்வேறு பெயர்களை கொண்டு உள்ளார்,மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த மாரியம்மாள் (எ) முத்துமாரி(எ) மாரி - 29 இவருக்கும் மூன்று பெயர்கள் உண்டு. மேலும் இவர்கள் மீது பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
Next Story