மணப்பாறை அருகே யானையில் ஊர்வலமாக வந்த ஐயப்பன்.

மணப்பாறை அருகே யானையில் ஊர்வலமாக வந்த ஐயப்பன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் மகா உற்சவ விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று காலை கணபதி ஹோமத்துடன் ஸ்ரீவேலி, ஸ்ரீ பூதபலி யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு பஞ்சகாவியங்களால் ஆன வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை ஐயப்பனுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு செண்டி மேளம் முழங்க திரு வீதி உலா யானையின் மீது உற்சவர் (ஐயப்பன்) அமர வைத்து கோவில்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீப ஆராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story