களம்பூர் பேரூராட்சியில் அதிக அளவில் விதிக்கப்பட்ட வீட்டு வரியை குறைக்கக்கோரி மனு.

களம்பூர் பேரூராட்சியில் அதிக அளவில் விதிக்கப்பட்ட வீட்டு வரியை குறைக்கக்கோரி மனு.
X
ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் வீட்டு வரியை அதிக அளவில் விதிக்கப்பட்டதை குறைக்கக்கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டின் உரிமையாளர் கோரிக்கை மனு கொடுத்தார்.
ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் வீட்டு வரியை அதிக அளவில் விதிக்கப்பட்டதை குறைக்கக்கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டின் உரிமையாளர் கோரிக்கை மனு கொடுத்தார். ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் சிவாவிடம் 64 கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் களம்பூர் பகுதியில் சேர்ந்த காளிங்கன் என்பவர் பேரூராட்சி நிர்வாகம் வீடு மற்றும் கடை ஆகிய கட்டிடத்திற்கு அதிக சொத்து வரி விதிப்பதாகவும் இதனை குறைத்து வரி போட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் இக்கூட்டத்தில் பட்டா தொடர்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், பிறப்பு சான்று, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பத்திரப்பதிவு ரத்து, கழிவு நீர் கால்வா் வசதி கோரி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கேட்டு 64 பேர் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Next Story