அடையபலம் கிராமத்தில் சொந்த நிலத்திற்கு செல்ல வழிவிடாமல் தடுக்கும் விவசாயி மீது புகார்.

X
Arani King 24x7 |16 Dec 2025 12:59 PM ISTஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் சொந்த நிலத்திற்கு செல்ல வழிவிடாமல் தடுக்கும் விவசாயி மீது ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலத்தின் உரிமையாளர் புகார் கொடுத்தார்.
ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் சொந்த நிலத்திற்கு செல்ல வழிவிடாமல் தடுக்கும் விவசாயி மீது ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலத்தின் உரிமையாளர் புகார் கொடுத்தார். ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் சிவாவிடம் 64 கோரிக்கை மனுக்களை வழங்கினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சிவா தலைமையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இதே போன்று அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்பவர் தனது விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடுபடுவதாகும் ஆக்கிரமிப்பு அகற்றி வழி ஏற்படுத்தி தருமாறு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு வழங்கினார். இதில் சுமார் 64 மனுக்கள் பெறப்பட்டன இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் பட்டா தொடர்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், பிறப்பு சான்று, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பத்திரப்பதிவு ரத்து, கழிவு நீர் கால்வா் வசதி கோரி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கேட்டு 64 பேர் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Next Story
