ராமநாதபுரம் மலேசியாவின் டுவின் டவர் கேக்பார்த்த பொதுமக்கள் பொதுமக்கள்

Ramanathapuram King 24x7 |16 Dec 2025 4:20 PM ISTகிறிஸ்துமஸ் புத்தாண்டை முன்னிட்டு பிரபல பேக்கரியில் 50 கிலோ எடையுள்ள 7அடி உயர மலேசியா டுவின் டவர் கேக், பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி.
ராமநாதபுரம் மாவட்டம்ஒவ்வொரு ஆண்டும் ஐஸ்வர்யாஸ் பேக்கரிஸ் சார்பாக கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு கேக் சிலை வைக்கப்படும். இதுவரை ரத்தன் டாடா, பாரதியார், இளையராஜா, மாரோடானா மற்றும் உலகக்கோப்பை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் இவ்வருடம் நூற்றாண்டுக்கும் மேலாக ராமநாதபுரத்திற்கும் மலேசியா நாட்டிற்கும் நிலையான தொடர்பு இருந்து வருகிறதென்ற வரலாற்று உண்மையை கொண்டாடும் வகையில் மலேசியாவின் பெருமைமிகு அடையாளமான இரட்டை கோபுரம் ( petronas twin Tower) கேக் வடிவில் செய்யப்பட்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி பார்வைக்காக ஐஸ்வர்யாஸ் பேக்கரிஸ் பாரதி நகர் கிளையில் வைக்கப்பட்டுள்ளது, 50 கிலோ சர்க்கரை மற்றும் 200 முட்டை கொண்டு உருவாக்கப்பட்ட சுமார் 7 அடி உயர இரட்டை கோபுரம் இரு நாடுகளுக்கிடையேயான நட்பை பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இதனை பேக்கரிக்கு வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் விழப்புடன் பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
Next Story
