பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி!!

புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளி சார்பில் இன்று பள்ளி வளாகம் முன்பு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிரொலி செய்யும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளியின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணியானது புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது இந்த பேரணியில் மாணவர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும் பெண்கள் இந்நாட்டின் கண்கள் பெண் குழந்தைகளை போற்றி பாதுகாப்போம் என கைகளில் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர் இந்த பேரணியில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா பேசுகையில் பாலியல் ரீதியான உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் எதற்கு அச்சப்பட தேவை இல்லை 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உங்களுடைய பெயர் முகவரி பாதுகாக்கப்பட்டு உங்களுக்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்படும் 1098 என்ற என் உங்களுக்கான கவசம் தற்போதுள்ள சூழ்நிலையில் குட் டச் பேட் டச் என்று மாறி டோன்ட் டச் என உள்ளது எனவே எந்த காரணத்துக்காகவும் அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை தொடுவதை நீங்கள் அனுமதிக்க கூடாது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்த விழிப்புணர் பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ரோட்டரி சங்க தலைவர் சரவணன் செயலாளர் மருது பாண்டியன் பொருளாளர் ராதா கிருஷ்ணன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
