காவேரிப்பாக்கம் அருகே லோக் ஜன சக்தி கட்சி சார்பில் கிறிஸ்மஸ் பெருவிழா!!

காவேரிப்பாக்கம் அருகே லோக் ஜன சக்தி கட்சி சார்பில் கிறிஸ்மஸ் பெருவிழா!!
X
ராணிப்பேட்டை தர்மநீதி கிராமத்தில், லோக் ஜனசக்தி கட்சி சிறுபான்மையினர் அணியின் சார்பில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்மஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை தர்மநீதி கிராமத்தில், லோக் ஜனசக்தி கட்சி சிறுபான்மையினர் அணியின் சார்பில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்மஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் போதகர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். ஜெய்சங்கர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் கட்சியின் மாவட்ட மகளிர் அணி தலைவி வசந்தி, துணைத் தலைவி புஷ்பலதா, துணைத் தலைவர் கோபி, விவசாய அணி தலைவர் தேவராஜ், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் பொன் முருகேசன் , மாவட்ட பொதுச் செயலாளர் மலர் ஆவலூர்பேட்டை மகளிர் அணி தலைவி ஜமுனாராணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சி. முனுசாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து போதகர் அருள்தாஸ் கிறிஸ்மஸ் செய்தியை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த உலகிற்கு வந்ததற்கான நோக்கம் மனிதர்களின் பாவங்களையும், சாபங்களையும் நீக்குவதற்கே. மனிதன் இழந்த சொர்க்க வாழ்க்கையை மீட்டுத் தர தன்னையே அர்ப்பணித்து, உலக மக்களின் பாவங்களுக்காக தமது சொந்த ரத்தத்தைச் சிந்தினார். இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் பாவச் சாபங்கள் நீங்கி, விடுதலையும் சமாதானமும் கிடைக்கும். ‘இயேசு’ என்ற பெயருக்கு விடுதலை செய்கிறவர் என்பதே அர்த்தம்” என்று விளக்கினார். தொடர்ந்து கிறிஸ்மஸ் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டனர் பின்னர் அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சி பொறுப்பாளர்கள், சபை விசுவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Next Story