அறந்தாங்கி பகுதியில் நெற்பயிரைத் தாக்கும் களைச் செடி; இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார் கோவில் மற்றும் மணமேல்குடி பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிரில் நடந்தோடி என்ற களைச்செடி முளைத்துள்ளது. நெற்பயிரைப் போலவே முளைக்கும் இந்த களைச்செடியை களைக்கொல்லியால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இந்த களைச்செடி பயிருக்கு நிகராக வளர்ந்து, உச்சியில் பஞ்சுபோன்று வளர்கிறது. பின்னர் அறுவடை செய்யும்போது இந்த களைச்செடியில் இருந்து விதைகள் வயலில் விழுந்து மறு ஆண்டு அவைகள் முளைத்து பயிரின் வளர்ச்சியை கெடுக்கின்றன. இதனால் மகசூல் குறைவதோடு, விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. எனவே நடந்தோடியை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதோடு, நடந்தோடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
