அரசு கலைக் கல்லூரியில் , பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

X
Komarapalayam King 24x7 |16 Dec 2025 6:37 PM ISTகுமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் ,பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவின் சார்பில் பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம், கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயனி வரவேற்றார். முதல்வர் சரவணாதேவி பேசுகையில், பாலின சமத்துவம் ஒரு சமூக பொறுப்பாகும் என்றும், கல்வி நிறுவனங்கள் சமூக நீதி மற்றும் சம உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மாணாக்கர்களிடையே வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, உதவிப் பேராசிரியர். சுமதி பங்கேற்று பேசிய போது, பாலின உளவியல், மனித நடத்தை மற்றும் மனப்பாங்குகளை எவ்வாறு வடிவமைக்கிறது என்றும், மாணாக்கர்களிடையே பாலின சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக பொறுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், பாலின அடையாளம் என்பது சமூக, கலாச்சார மற்றும் உளவியல் காரணிகளின் ஒருங்கிணைப்பாக உருவாகும் என்பதையும், பாலினத்தைப் பற்றிய புரிதல் மனித உறவுகள் மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறித்தும் பேசினார். இதில் பேராசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
