சோளசிராமணி அருகே காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

X
Paramathi Velur King 24x7 |16 Dec 2025 8:39 PM ISTசோளசிராமணி அருகே காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், டிச.16: பரமத்தி வேலூர் தாலுகா சோளசிராமணி காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்மின்நிலையம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அதை பார்த்தவர்கள் இது குறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த வாலிபர் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
