பாஜக சார்பில் சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாடு.

பாஜக சார்பில் சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாடு.
X
ஆரணி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆரணி சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாடு நடைபெற்றதில் பேசினார் பெருங்கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் குணசேகரன்.
ஆரணி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆரணி சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பயிலரங்கத்தில் ஆரணி சட்டமன்ற அமைப்பாளரும், மாவட்ட பொதுச்செயலாளருமான வி.சதீஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேலூர் பெருங்கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் குணசேகரன், மாநில மகளிர் அணி துணைத்தலைவி கிருஷ்ணசாந்தி, வேலூர் பெருங்கோட்ட துணைத் தலைவர் ஸ்ரீகாந்த், திருவண்ணாமலை தெற்கு பொது செயலாளர் ஜெய்காந்த் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் ஆரணி சட்டமன்ற தொகுதி இணை அமைப்பாளர் சைதை வ.சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் எம்.முத்துசாமி மற்றும் மாநில நிர்வாகிகள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஆரணி சட்டமன்றத்திற்கு உட்பட்ட அணி பிரிவு அமைப்பாளர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மேலும் இதில் பிற கட்சியிலிருந்து விலகி 50 பேர் பாஜகவில் இணைந்தனர்.
Next Story