ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது

இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம்இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி, ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றதுக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி, டிச.1 முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இ-பைலிங் முறைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திவிட்டு, இந்த முறையை கொண்டுவர வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்திலிருந்து ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அஞ்சலகத்தில் உயர்நீதிமன்றத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினர். இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அன்புச்செழியன், செயலாளர் முத்து துரைசாமி, துணைத்தலைவர் பாபு உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Next Story