தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்

X
Tenkasi King 24x7 |16 Dec 2025 10:52 PM ISTதென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
டிசம்பர் 16 தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்டத்திற்கு அச்சன்கோவில் ஐயப்ப சுவாமி கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த திரு ஆபரண பெட்டியை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது.. மேலும் 3000 திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 2. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் இன்று மார்கழி ஒன்றாவது நாள் சிறப்பு பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 3. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் டிசம்பர் 18 மின் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 4. தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள திருமலை குமாரசாமி கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 5. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகிலுள்ள வெள்ளை கவுண்டன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 6. தென்காசி மாவட்டம் கே ஆர் காலனி பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 7. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமசாமிபுரம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைகளுக்கு திட்டத்தின் கீழ் 1.61 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டது.
Next Story
