புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை!!

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பூத் 60 மற்றும் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் பூத் எண் 179, 180, 182 *ஆகிய வாக்குச்சாவடி பொதுமக்களை சந்தித்து. திமுக அரசின் சாதனைகளை மகளிர் உரிமைத் தொகை இலவச பேருந்து திட்டம் இல்லம் தேடி கல்வி உங்களுடன் ஸ்டாலின் முகாம் என பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து பரப்புரைகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா உரையாற்றினார். இந்நிகழ்வின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே கே செல்லபாண்டியன் தலைமையாற்றினார் மேலும் நிகழ்வில் தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி ஒன்றிய கழகச் செயலாளர் சாமிநாதன், தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ் மாமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டக் கழகச் செயலாளர், மாநகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
