அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட வத்தலக்குண்டு முன்னாள் யூனியன் சேர்மன் ஒ.ராஜேந்திரன் விருப்ப மனு!!

அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட வத்தலக்குண்டு முன்னாள் யூனியன் சேர்மன் ஒ.ராஜேந்திரன் விருப்ப மனு!!
X
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட வத்தலக்குண்டு முன்னாள் யூனியன் சேர்மன் ஒ.ராஜேந்திரன் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்ற திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட வத்தலக்குண்டு முன்னாள் யூனியன் சேர்மன் ஒ.ராஜேந்திரன் என்பவர் விருப்பம் தெரிவித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளார். இவர் திமுகவில் தொடர்ந்து 25 ஆண்டு காலம் வத்தலக்குண்டு ஒன்றிய கழக செயலாளராக இருந்துள்ளார். தொகுதிக்குள் தான் சார்ந்துள்ள சாதி வாக்குகளை திமுகவிற்கு சாதகமாக்கி வெற்றிக்கு வித்திட்ட முக்கிய நபர் ஆவார். சமீபத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி உடனான கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் ஆத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவித்தால் வெற்றி உறுதி என மூத்த அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் தெரிவித்துவிட்டு வந்துள்ளார். ஐ.பெரியசாமியும் வத்தலக்குண்டை சார்ந்தவர் தான் என்பதும், இருவருமே ஒரே சமூகத்தில் இரு வேறு பிரிவை சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story