ராமநாதபுரம் வருகின்ற சட்டமன்ற தேர்தலைபுறக்கணிக்க போவதாக கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Ramanathapuram King 24x7 |17 Dec 2025 12:14 PM ISTவிவசாய நிலங்களை கையகபடுத்தி விமான நிலையம் அமைக்க 10 கிராம மக்கள் எதிர்ப்பு. வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி,மண்டபம் ஒன்றியம் பகுதியில் கும்பரம்,பெருங்குளம்,ரெகுநாதபுரம்,வாலாந்தரவை ஆகிய ஊராட்சியில் 700 ஏக்கர் கையகபடுத்தி மத்திய அரசு உடான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால், கும்பரம்,இராமன்வலசை,பூசாரிவலசை,கோகுல்நகர்,கிருஷ்ணநகர்,டி.கே.நகர்,வாலாந்தரவை,தெற்குவாணி வீதி,படைவெட்டி வலசை,ரெகுநாதபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் 4 லட்சம் தென்னை மரங்கள்,10 லட்சம் பனை மரங்கள் மற்றும் எல்,பயிறு,கடலை,நெல் ஆகியவற்றை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த இடத்தை விமானம் நிலையம் அமைக்க வேண்டும் என்றால் ஒட்டு மொத்தம் விவசாயம் அழிந்து விடும், பல்லாயிரக்கனக்கான மக்கள் இடம் பெயரும் நிலையில் இந்த திட்டத்திற்கு 10 கிராமங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கும்பரம் கிராமத்தில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 10 கிராமங்களை அழித்து விட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டால் 10 கிராமங்களை சேர்ந்து மக்கள் தங்களின் குடும்ப அட்டை,ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டு வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என தீர்மானம் நிறைவேற்றினார்.
Next Story
