உடையகுளத்துப்பட்டியில் சாலை அமைத்து தராமல் சோலார் மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

X
Krishnarayapuram King 24x7 |17 Dec 2025 3:37 PM ISTபொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி உடைய குளத்துப்பட்டியில் சாலையில் இருந்து மலப்பட்டிக்கு மண்பாதை செல்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காய்கறி வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். உடைய குளத்துப்பட்டியில் இருந்து மலைப்பட்டிக்கு செல்லும் இந்த மண் பாதையை பயன்படுத்தி பள்ளி மாணவ மாணவிகளும் பள்ளிகளுக்கும், பொதுமக்கள் மாயனூர் மணவாசி செல்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதையை தவிர்த்தால் அவர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் இந்த மண்பாதை சேரும் சகதியுமாக நிரம்பியும் அருகில் உள்ள காட்டு வாரியில் தண்ணீர் செல்லும் போது இப்பகுதி மக்கள் வெளியே சென்று விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்ததால் அப்பகுதியில் காட்டுவாரின் குறுக்கே சிறு வாழம் அமைத்து தங்களுக்கு தார் சாலை அமைத்து தர வேண்டுமென சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் தனியார் சோலார் நிறுவனர் அங்கு சோலார் பேனல்கள் அமைத்து மாயனூர் துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக இந்த பாதையின் வழியே தற்போது மின் கம்பங்கள் நடுவதற்கு வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு சாலை அமைத்து தராமல் இப்பகுதியில் சோலார் மின்கம்பங்கள் அமைக்க கூடாது எனக் கூறி பணியினை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் லாலாபேட்டை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தாங்கள் இந்த சாலை வழியாக சோலார் மின்கமம் அமைத்துக் கொள்வதற்கு எந்த வித அனுமதியும் வழங்கவில்லை ஆனால் எங்களிடம் அனுமதி பெறாமல் சோலார் மின் கம்பம் நடை வந்துள்ளார்கள் என்று கூறியும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தார்ச்சாலை மற்றும் சிறு பாலம் அமைப்பிற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
