அறந்தாங்கி அருகே தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி; வேடம் அணிந்து வந்த மாணவ மாணவிகள்!!

புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளின் அறிவியல் திறனையும் கொண்ட பொதுமக்களுக்கு கருத்துக்கள் வழங்கப்பட்டு அறிவில் சம்பந்தமாக வேடம் அணிந்து வந்தனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் சிறப்புகளை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. நிகழ்வில் பள்ளியின் தாளாளர் கண்ணையன்தலைமை ஏற்க பள்ளி முதல்வர் சுரேஷ் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்... மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் காவல்துறை ஆய்வாளர் சரவணன் சார் மற்றும் அறந்தாங்கி ரோட்டரி தலைவர் ரவிசங்கர் சார் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் பீர் ஷேக்நகர்மன்ற உறுப்பினர்கள் காசிநாதன், நசுருதீன் அவர்களும், சதன் பில்டர்ஸ் உரிமையாளர் ஜாகிர் உசேன் மாமன்ற உறுப்பினர் அசாருதீன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாகவும் அவர்களின் அறிவியல் படைப்புகளை பற்றி விளக்கிய விதம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது... இந்த நிகழ்ச்சியை பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி இருபால் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்... இறுதியில் பள்ளி ஆசிரியர் நிசாம் நன்றி கூறினார்
