நாமக்கல் வாசவி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

X
Namakkal King 24x7 |17 Dec 2025 6:47 PM ISTநாமக்கல் வாசவி கிளப் தலைவராக ஜெ.நாக ஹரிஷ்குமார்,செயலாளராக பி.மனோஜ்,பொருளாளராக எஸ்.தினேஷ் குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளராக பிரனேஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.
நாமக்கல் போர்ட் வாசவி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நாமக்கல் கடைவீதியில் உள்ள வாசவி மகாலில் நடைபெற்றது. விழாவில் டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு வாசவி கிளப் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.சர்வதேச மாவட்ட வாசவி மாவட்ட ஆளுநர் ஏ.வெங்கடேஸ்வர குப்தா தலைமையில் புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ் விழாவில் சிறந்த விருந்தினராக ஐஇசி தலைமை நிர்வாக துணைத் தலைவர் என். பலராமன், ஐஇசி அலுவலர்கள் சத்ய நாராயணன், கெளரவ விருந்தினராக நாமக்கல் வாசவி கிளப் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பி. தாசப்பன் செட்டியார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். நாமக்கல் வாசவி கிளப் தலைவராக ஜெ. நாக ஹரிஷ்குமார், செயலாளராக பி. மனோஜ், பொருளாளராக , எஸ்.தினேஷ் குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளராக பிரனேஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். இவ்விழாவில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Next Story
