பாலியல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நிர்வகித்தல் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு.

நாமக்கல் மாநகராட்சி, கோஸ்டல் ரெசிடென்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் முனைவர்.கசிமிர்ராஜ் மற்றும் மரு.மனோபாஸ்கர் ஆகியோர் முன்னிலையில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலியல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நிர்வகித்தல் என்ற தலைப்பின் கீழ் காவல்துறை மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்புபயிற்சி முகாம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய தினம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ”பாலியல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நிர்வகித்தல்” என்ற தலைப்பின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கவேண்டிய அடுத்து கட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினரும் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். பாலியல் துன்புறுத்தல் குறித்து அதிகபடியான தயக்கங்கள் உள்ளது. காவல்துறையினர் கூடுதல் பொறுப்புடனும், கடமையுடனும் இதனை கையாள வேண்டும். அவர்களின் தயக்கங்களை போக்கி, நம்பிக்கை வழங்குவதோடு, விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.குழந்தைகளின் பாதுகாப்பிற்கென 20-க்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளது. குறிப்பாக, நிதி ஆதரவு மற்றும் வளர்ப்பு பராமரிப்பு, அன்புக் கரங்கள் திட்டம், கோவிட் – 19 நிவாரண நிதி, POCSO இழப்பீட்டுத் தொகை, வளர்த்துப் பேணுதல் திட்டம், பிற்காப்பு வளர்த்துப் பேணுதல் திட்டம், சிறப்புக் குழு, குழந்தைத் திருமணம் மற்றும் இளம் வயது கருவுற்றல் அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து விழிப்புணர்வு, குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல்கள், கோவிட்-19 தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த கணவர்/மனைவிகளுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள், தனியார் அறக்கட்டளையின் மூலம் கோவிட்-19 தொற்றால் ஒற்றைப் பெற்றோரை இழந்து, தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, நலத்திட்டங்கள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குழந்தைகளை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் காவல்துறை மற்றும் மருத்துவத்துறையின் ஈடுபாடு என்படு மிக முக்கியமானதாகும். போக்சோ திட்டம் என்பது மிக சிறப்பான திட்டமாகும். இச்சட்டம் மற்ற சட்டங்களை போல் அல்லாமல், குழந்தைகள், உடல் மற்றும் உள்ளத்தால் பலவீனமானவர்கள், ஏழ்மையானவர்கள், கல்வியறிவு இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதாக உள்ளது. மேலும் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமமான சட்டமாகும். பாலியல் துன்புறுத்தல் என்பது உடல் ரீதியாக மட்டும் அல்லாது மன ரீதியான பிரச்சனையாகும். காவல்துறையினர் குழந்தைகளின் பாதுகாவலர்கள். இப்பயிற்சியில் உங்களது சந்தேகங்களும், கேள்விகளும் அதிகபடியான தகவல்களை கொண்டு சேர்க்கும். போக்சோ சட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறோம், அதனை எவ்வாறு நடைமுறைபடுத்துகிறோம், இதில் உள்ள சவால்கள், குறைபாடுகள், அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதை அறிந்து கொள்வதோடு, மேலும், நீங்கள் கற்ற தகவல்களை பிறருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் எப்.போர்ஷியா ரூபி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (மு.கூ.பொ) .ஈ.சந்தியா, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, துறைத் தலைவர் (குழந்தை மற்றும் இளம் பருவ மனநல மருத்துவம் – உயிர் பிழைத்தவர்களின் மனநல மேலாண்மை) மரு.சத்யராஜ், இணை பேராசிரியர் (தடயவியல் மருத்துவம் (ம) நச்சுயியல் மருத்துவம் – சட்ட மேலாண்மை) மரு.லதீப்ஆர்.ஜான்சன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்) கற்பகம் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், காவல்துறை, மருத்துவ துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
