முட்டை சாப்பிட்டால் கேன்சர் வருமா ? எழுந்துள்ள சர்ச்சையால் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சி நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் திடீர் ஆலோசனை கூட்டம்.

நைட்ரோபுரான் என்ற தடை செய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருத்துகளை எதுவுமே பயன்படுத்துவதில்லைம முட்டை பவுடர், முட்டைகள் ஆய்வு செய்த பிறகே ஏற்றுமதிக்கு செல்கின்றன தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் பேட்டி.

முட்டை சாப்பிட்டால் கேன்சர் வரும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் சிங்கராஜ், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோழிப்பண்ணையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோழிப்பண்ணையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டன. கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் அளித்த பேட்டியில் :-தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நைட்ரோபுரான் என்ற தடை செய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருத்துகளை எதுவுமே பயன்படுத்துவதில்லை, மருத்துவர்களும் ஆய்வு செய்வதில்லை, நாங்க எக் பவுடர், எக் ஆகியவை ஆய்வு செய்து ஏற்றுமதிக்கு செல்கின்றன, எந்தவிதமான குறைபாடுகளும் கிடையாது, சரியான புரதசத்து முட்டையில் தான் உள்ளது அதனால் எந்தவிதமான பாதிப்பு இல்லை, உணவு பாதுகாப்புத்துறையினர் கோழிப்பண்ணைகள், கடைகளில் விற்பனையாகும் முட்டைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து அதனுடைய ரிசல்ட்யை ஒரு வார காலத்திற்குள் வெளியிடுவதாக கூறியுள்ளனர்.தற்போது முட்டை கொள்முதல் விலை ரூ.6.25 ஆக விற்பனை நடைபெற்று வருதால் தான் கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளித்து வருகின்றோம், சரியான முறையில் எல்லாம் நடந்து வருகின்றன. கோழிகள் ஆரோக்கியமான முறையில் இருக்க சுகாதார முறையை கடைபிடிக்கின்றோம், சுத்தமான தண்ணீர் கோழிகளுக்கு வழங்கி வருகின்றோம், கோழிகளுக்கு சின்ன சின்ன நோய்கள் வந்தால் டாக்டர்கள் ஆலோசனை படி மருந்துகளை கோழிகளுக்கு வழங்குவோம், நைட்ரோ புரான் எனபடும் மருந்து வகைகளை நாங்கள் பயன் படுத்துவதில்லை, கோழிகளுக்கு தீவினங்கள் வாங்கவே சிரமாக உள்ளது என்றார்

Next Story