புதுக்கோட்டைக்கு வருகை தரும் பிரதமர் மோடி... பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்!!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி புதுக்கோட்டைக்கு வர உள்ள நிலையில், அந்த விழா நடைபெறும் பாலா நகர் அருகே 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனியாருக்கு சொந்தமான இடத்தை, பலத்த போலீஸ் பாதுகாப்போடு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு, பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை கொண்டு இடத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திட்டம் தேதி உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் மற்றும் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தினை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது மேலும் ட்ரோன் கேமராக்கள் மூலம் இடத்தினை அளவிடும் செய்யும் பணியும் நடைபெற்றது பிரதமர் மோடி ஜனவரி மாதம் வருகிறார் என்பது மட்டும் தெரிவித்திருக்கும் நிலையில் எந்த தேதியில் வருகிறார் என்பது தெரியாமல் பாஜக நிர்வாகிகள் தற்பொழுது அந்த தூய்மைப்படுத்தும் அணையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பொதுமக்கள் எந்த இடத்தில் உட்கார வேண்டும் வாகனங்கள் எங்கே நிறுத்த வேண்டும் எலிபேண்ட் எந்த பகுதியில் அமைக்க வேண்டும் என்பது குறித்து இடத்தின் வரைபடத்தை வைத்து தற்பொழுது இடத்தினை பார்வையிட்டு வருகின்றனர் மேலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் பாரத பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் பங்கேற்று வரும் சூழ்நிலையில் தற்பொழுது புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் முதன்முதலாக பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
