இந்து மக்கள் கட்சி சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

இந்து மக்கள் கட்சி ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் எஸ் கே மோகன் தலைமையில் வழங்கப்பட்ட இந்த மனுவில், சோளிங்கர் பாண்டியநல்லூர் பஞ்சாயத்து கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான மலையில் சிலுவை வைத்து சர்ச் கட்டி வருவதாகவும் சட்டவிரோதமாக கட்டி வரும் சர்ச் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் ஆஞ்சநேயர் இளைஞரணி மாவட்ட தலைவர் அஜித் குமார் மற்றும் மாவட்ட பொருளாளர் சம்பத், வாலாஜா ஒன்றிய தலைவர் கணேசன், அம்முர் பேரூராட்சி தலைவர் ஐய்யப்பன், வாலாஜா நகர துணை தலைவர் சத்யநாராயணன் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
