தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தல்; துணை பொதுச்செயலாளரானார் இராணிப்பேட்டையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர்!!

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தல்; துணை பொதுச்செயலாளரானார் இராணிப்பேட்டையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர்!!
X
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் துணை பொதுச்செயலாளராக இராணிப்பேட்டை மாவட்டம் திமிரியைச் சேர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர் பாலகணேஷ் வெற்றி பெற்றிருக்கிறார்.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை செயின் தாமஸ் மவுண்டில் உள்ள மான்போர்ட் பள்ளியில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளை தேர்வுசெய்வதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் ஆர்வத்தோடு தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். சென்னை மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திராவின் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நீதி அரசர் திரு ராஜ இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் ஏராளமான உறுப்பினர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் தம் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவராக திரு சண்முகவேல் வெற்றிபெற்றிக்கிறார். பொதுச்செயலாளராக திரு.கிறிஸ்டோபர் தேவநேசனும், பொருளாளராக திரு. பாலசுப்பிரமணியம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் துணைத் தலைவர்களாக திருமதி. கீதா சம்பத்குமார் மற்றும் திரு மனோஜ் குமார் கோபாலன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் துணைப் பொதுச் செயலாளராக திரு பாலகணேஷ், திருமதி. கௌரி, திருமதி ஜீவா ஆகியோர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களோடு 15 செயற்குழு உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள். மிக அமைதியான முறையில் நடைபெற்ற இந்த தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து செய்தி சேனல்கள், ஊடகங்களில் செய்திவாசிப்பாளர்களாக பணிபுரிந்த, மற்றும் தற்போதும் பணியாற்றிவரும் செய்தி வாசிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர்.

Next Story