பொன்னமராவதி தாலுகாவில் பிரபல தனியார் ஜவுளி கடை பணியாளர்களுக்கு சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம்!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் ஆதிகாலத்து அலங்கால மாளிகையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்களுக்கான சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் பொன்னமராவதி வர்த்தகர் கழக மஹாலில் நடந்தது. முகாமிற்கு பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிர்வாக மேலாளர் வீரையா தலைமை வகித்தார். அக்கவுண்ட்ஸ் மேலாளர் சண்முகம் வரவேற்றார். சீனியர் பர்சேஸ் மேனேஜர் ராஜா, விற்பனை வளர்ச்சி மேலாளர்கள் விஜயபாஸ்கர், பாலு, பர்ச்சேஸ் மேனேஜர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு கண் பரிசோதனை, கண்களில் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை முதலிய பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவைப்படுவோருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பரிசோதனைகளை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினரும், முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை விவேகானந்தனும் செய்திருந்தனர். பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை மனிதவள மேலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
