வையம்பட்டி அருகே மாமனார் இறப்பில் சந்தேகம். அடித்துக் கொன்றதாக கூறி மருமகன் கைது.

வையம்பட்டி அருகே  மாமனார் இறப்பில் சந்தேகம். அடித்துக் கொன்றதாக கூறி மருமகன் கைது.
X
வையம்பட்டி அருகே மாமனார் இறப்பில் சந்தேகம். அடித்துக் கொன்றதாக கூறி மருமகன் கைது.
வையம்பட்டி அருகே மாமனார் இறப்பில் சந்தேகம். அடித்துக் கொன்றதாக கூறி மருமகன் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து வையம்பட்டி அருகே உள்ள குமாரவாடி , சடையம்பட்டியைச் சேர்ந்தவர் நல்லுச்சாமி மகள் தனபாக்கியம். இவருக்கும் கருப்பூரைச் சேர்ந்த சௌந்தர்ராஜ் என்பவருக்கும் திருமணம் முடிந்து சுமார் 15 வருடம் ஆகின்றன. இந்த நிலையில் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் தங்கி சௌந்தர்ராஜன் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு தனபாக்கியம் கணவரை விட்டு பிரிந்து சடையம்பட்டியில் உள்ள அப்பாவுடன் வசித்து வந்தார். நேற்று சௌந்தரராஜன் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக வந்தபோது மாமனார் நல்லுச்சாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சௌந்தர்ராஜன் மாமனார் நெஞ்சில் உதைத்ததாக கூறப்படுகிறது.இதனால் நெஞ்சு வழி தாங்காமல் கீழே மயங்கி விழுந்தார். கீழே விழுந்தவர் மீண்டும் எழவில்லை என்பதால் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் பற்றி வையம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சௌந்தர்ராஜன் மாமனாரை எட்டி உதைத்ததால் அவர் உயிரிழந்தாரா என்ற சந்தேகத்தின் பேரில் சௌந்தரராஜனை வையம்பட்டி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story