ராசிபுரத்தில் ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா செயற்குழு கூட்டம்...

ராசிபுரத்தில் ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா செயற்குழு கூட்டம்...
X
ராசிபுரத்தில் ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா செயற்குழு கூட்டம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரிமா சங்கம் சுமங்கலி மஹாலில் ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் மற்றும் மாநில தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மற்றும் மாநில துணைத்தலைவர் வரதராசன் வரவேற்புரையாற்றினார். 100 அகவை நிறைந்த புலவர் ராமசாமி அவர்களின் நல் ஆசியுடன், விழாவினை கேப்டன் டாக்டர் எஸ் சதாசிவம் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர், முன்னாள் அண்ணாமலை பல்கலைக்கழக சென்ட் உறுப்பினர் அருள்நிதி முனைவர் மு.அ. உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அசோகன் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி வரவு, செலவு வாசித்தார். பட்டத் தலைவர் மற்றும் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், ராசிபுரம் வட்ட செயலாளர் காத்த முத்து ஆகியோர் தீர்மானங்கள் குறித்து பேசினர். இக்கூட்டத்தில், பொங்கல் முன்பணம் 2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், ஓய்வூதியர் இறந்தால் குடும்ப நல விதியாக வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.50,000 இருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெறும் பொழுது காப்பீட்டு திட்டத்தில் இன்சூரன்ஸ் கம்பெனி ஆல் வழங்கப்படும் தொகை பல ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாததாலும் ஓய்வூதியர்கள் சிகிச்சை பெரும் முழு தொகையையும் இன்சூரன்ஸ் கம்பெனியால் வழங்கப்படாததாலும் ஓய்வூதியர்களிடம் இருந்து மாதம் தோறும் பிடித்து செய்யப்படுகின்ற ரூபாய் 497 தொகையை இனி பிடித்தம் செய்யாமல் ரத்து செய்ய வேண்டும், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Next Story