குடியிருப்புகளில் சீல் வைக்க வந்ததால் பொதுமக்கள் மறியல் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல்

குமாரபாளையம் குடியிருப்புகளில் சீல் வைக்க அதிகாரிகள் வந்ததால் பொதுமக்கள் மறியல் செய்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல் கூறினார்.
குமாரபாளையம் நகராட்சியில் பாலக்கரை என்னும் பகுதி உள்ளது இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி அப்பராய சத்திரத்திற்கு சொந்தமானது கூறப்பட்டு வருகிறது. அப்புராயர் என்ற மன்னர் இப்பகுதியை ஆளும் பொழுது குடியிருப்புகள் உருவாக்கி பொது மக்களுக்கு தானமாக வழங்கப்பட்டதாக கூறப்படும் இந்த பகுதி தற்பொழுது இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது எனக் கூறி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வருட காலமாக இப்பகுதி மக்களை, குடியிருப்புகளை காலி செய்து வெளியேருமாறு வற்புறுத்தி வருகின்றனர்,. இந்நிலையில் நேற்று காலை இந்து சமய அறநிலை துறை ஈரோடு இணை ஆணையர் தலைமையில் வந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அப்புராய சத்திர பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்கு சீல் வைத்தனர் இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதுடன், பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள குமாரபாளையத்தில் இருந்து பவானி செல்லும் காவிரி ஆற்றின் பாலத்தின் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பயன் ஏற்படாததால், வட்டாட்சியர் பிரகாஷ் உடனடியாக அந்த பகுதி மக்களை வரவழைத்து சாலை மறியலை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என அழைத்ததின் பேரில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தாசில்தார் அலுவலக நுழைவுப்பகுதியை அடைத்தவாறு அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தாசில்தார் பிரகாஷ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவாமிநாதன், கோவில் நில அலுவலர் செந்தில்குமார், செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் கலந்து பேசி, வார கால அவகாசம் கொடுத்தனர். சீல் வைக்கபட்ட ஒரு வீட்டின் சீல் அகற்றப்பட்டது. அதன்பின் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதன்பின் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், நான் இருக்கிறேன். தைரியமாக இருங்கள். ஒற்றுமையுடன் இருங்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று ஆறுதல் கூறினார். காலை `08:00 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 05:00 மணி வரை நீடித்தது. குமாரபாளையம் புத்தர் வீதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட மண்டபம் ஒன்றை அறநிலையத்துறை அதிகாரிகள் வசம், அதன் நிர்வாகிகள் ஒப்படைத்தனர். iஇது குறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அப்புராயர் சத்திரம் இடம் அரசுக்கு சொந்தமான இடம். இங்கு 82 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர். இவர்களிடம் வாடகை செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அதில் 49 பேர் வாடகை கொடுக்க சம்மதம் கூறினர். இதர நபர்கள் தான் இதுபோல் போராட்டம் செய்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்கள்.
Next Story