தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்

X
Tenkasi King 24x7 |17 Dec 2025 11:22 PM ISTதென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
டிசம்பர் 17 தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. பனிப்பொழிவின் தாக்கமும் அதிக அளவில் இருப்பதால் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. ஐந்தருவி குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. 2. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் இன்று மார்கழி மாதம் இரண்டாவது நாள் அதிகாலை சிறப்பு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. 3. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையன் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவின் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பின் கீழ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 4. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவேங்கடம், சிவகிரி, செங்கோட்டை, கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி ஆகிய ஆறு தாலுகாவிற்கு டிசம்பர் 21 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் தேர்வு நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. 5. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 6. ஆய்க்குடி அனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி நாளை நடைபெறுவதை தொடர்ந்து காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7. ஜேசிபி எர்த் மூவர்ஸ் பயன்பாட்டிற்கான கட்டணங்களை உயர்த்தக் கோரி இரண்டு நாட்களாக தென்காசி பகுதியைச் சார்ந்த எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த பரவலான மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகள் மழை நீர் தேங்கி வண்ணம் காணப்படுகிறது.
Next Story
