கொலை செய்தவர்கள் கைது

X
Dindigul King 24x7 |18 Dec 2025 8:11 AM ISTதிண்டுக்கல் மாவட்டம் பழனி
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 17.11.2025 ம்தேதி தோமையார் (எ) சின்னத்தம்பி (37) என்பவரை முன்பகை காரணமாக பழனி நகர் பகுதியைச் சேர்ந்த 1)சூரியா ஆபிரகாம் (20), 2)சிவா (எ) ஆரோக்கிய ரோஸி (29), 3)சிவசங்கர்(20), 4)விஜய் ஆதித்யா(20) மற்றும் 5)மேயர் முத்து (எ) முத்து (31) ஆகியோர் கொலை செய்தனர் இதையடுத்து பழனி நகர் காவல்துறையினர் 5 நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு எஸ்.பி.அ.பிரதீப் அறிவுறுத்தலின்படி,கலெக்டர் சரவணன் மேற்கண்ட 5 நபர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். *இதனை தொடர்ந்து பழனி நகர் காவல்துறையினர் 05 நபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்
Next Story
