வடமதுரையில் நகை அடகு கடையில் தங்கம் என கவரிங் நகையை பலமுறை அடகு வைத்து பணம் பெற்று சென்ற நபர் கைது

X
Dindigul King 24x7 |18 Dec 2025 8:29 AM ISTதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை
திண்டுக்கல், வடமதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நகை அடகு கடையில் சிதம்பரம், மன்னார்குடி தெருவை சேர்ந்த குமார்(47) மோதிரத்தை அடகு வைக்க வந்தார். அடகு கடை ஊழியர் பழனிசாமி அதனை பரிசோதித்தபோது அது கவரிங் என தெரிய வந்தது. இதற்கு முன் குமார் 5 முறை நகையை தங்கம் என அடகு வைத்து ரூ.1,57,000 வாங்கி சென்றுள்ளார். ஊழியர் அதனை சோதனை செய்த போது அவையும் கவரிங் என தெரியவந்தது. இதுகுறித்து ஊழியர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
