திண்டுக்கல் மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Dindigul
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மின்சார சிக்கனம், மின்சார பயன்பாடு, பாதுகாப்பாக மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொடங்கி தலைமை தபால் அலுவலகம், பேருந்து நிலையம், மெயின் ரோடு வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது
Next Story