விராலிமலை என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி கூட்டம்; மாவட்ட செயலாளர் பங்கேற்பு!!

புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலை கிழக்கு ஒன்றியம் பாகம் எண் 16 "என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி" செயல்திட்ட கூட்டம் திமுக மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையில் ஒன்றிய செயலாளர் MPM.சத்தியசீலன் முன்னிலையில் நடைபெற்றது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாக நிலை முகவர், பாக குழு உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் ஆகியோருடன் வியூகம் வகுத்து வெற்றிக்கான இலக்கை உறுதிப்படுத்தினர். மேலும் தமிழக முதல்வர் திட்டங்களை எடுத்து பொதுமக்களுக்கு கூற வேண்டும் என்று கூட்டத்தை ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விளாப்பட்டி சிவா, மதயானிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் சின்னப்பா, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ராஜா ஸ்டாலின், எழில் ராஜா உள்ளிட்ட கழக ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
