கட்டி முடிக்கப்படாத பேருந்து நிலைய கட்டிடத்திற்கு நகராட்சி நிர்வாகம் டெண்டர் விடுவது சட்டவிரோதமானது: நாகை நகர அதிமுக செயலாளர்

நாகையில் கட்டி முடிக்கப்படாத புதிய பேருந்து நிலைய கட்டிடத்திற்கு நகராட்சி நிர்வாகம் டெண்டர் விடுவது சட்டவிரோதமானது எனவும் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் நாகை நகர அதிமுக செயலாளர் தங்க கதிரவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதிய பேருந்து நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டு ஓராண்டுக்குள் கட்டி முடித்திருக்க வேண்டும் ஆனால் ஒரு வருடம் நான்கு மாதம் ஆன நிலையில் கட்டிடம் ஆரம்ப நிலையிலேயே உள்ளது இந்த நிலையில் கட்டி முடிக்கப்படாத பேஸ்மெண்ட் போடப்பட்டு ஆரம்ப நிலையிலேயே உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு கடைகள் உணவகங்கள் ஆகியவற்றிற்கு நாகை நகராட்சி டெண்டர் விட்டுள்ளது. வணிகர்களையும் நாகை மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது கட்டப்படாத கட்டிடத்திற்கு டெண்டர் விடுவது முற்றிலும் சட்ட விரோதமானது ஆகையால் விடப்பட்ட டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
