அவ்வையார் விருதுக்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்
X
Perambalur King 24x7 |18 Dec 2025 2:52 PM ISTபெரம்பலூர்மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தொலைபேசிஎண்: 04328-296209. என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசால் 2025-26ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் அவ்வையார் விருதுக்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தகவல். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஒளவையார் விருது சமூக சீர்திருத்தம் மத நல்லிணக்கம் மொழித்தொண்டு கலை அறிவியல் பண்பாடு கலாச்சாரம் பத்திரிக்கை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்துவிளங்கும் மகளிருக்கு 2026ஆம் ஆண்டுக்கான ஒளவையார் விருது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது இவ்விருது பெறுவோருக்கு, ரூ1,50,000/-(ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் இவ்விருது பெற விரும்புவோர்தங்கள் விண்ணப்பங்களை ”(https;//awards.tn.gov.in)” என்ற இணையதளத்தின் மூலம் 31.12.2025 அன்றுக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இவ்விருதிற்குவிண்ணப்பிக்கும் நபர்கள் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்ட வராகவும்இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்து விளங்கும்மகளிராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கான இச் சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள்இவ்விருதுக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இணையதளத்தில் பதிவு செய்தபிறகு அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பவேண்டும். மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர்மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தொலைபேசிஎண்: 04328-296209. என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story
