மாணவர்கள் ஆபத்தான பயணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

X
Tenkasi King 24x7 |18 Dec 2025 4:39 PM ISTமாணவர்கள் ஆபத்தான பயணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செங்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளுக்கு சென்று வர அரசு நகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செல்லும் மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவிலான மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் எந்த நேரமும் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அரசு வழங்கிய மிதிவண்டிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான மாணவர்கள் அரசு வழங்கிய மிதிவண்டிகளை பயன்படுத்துவதில்லை.
Next Story
