ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |18 Dec 2025 4:54 PM ISTஎதிர்க்கட்சி தலைவர்களை பழி வாங்கும் நோக்கில் நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் பொய் வழக்கு பதிவு செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் எதிர்க்கட்சி தலைவர்களை பழி வாங்கும் நோக்கில் நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் பொய் வழக்கு பதிவு செய்த மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங். கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் இன்றிரவு நடந்தது. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். இதில் ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, தேசிய மகளிர் காங். உறுப்பினர் ராமலட்சுமி, வட்டாரத்தலைவர்கள் காருகுடி சேகர், சேதுராமன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கந்தசாமி, சுப்ரமணியன், மனித உரிமை துறை தலைவர் அபுதாஹீர், ராணுவப் பிரிவு மாவட்ட தலைவர் ராஜகோபால், பட்டியல் இன பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, ஓபிசி அணி சட்டமன்றத் தொகுதி தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



