தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிட முயற்சி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!!

இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமாக அறியப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் நடைபெறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (100 நாள் வேலை) பெயரை மாற்றிட முயற்சி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்த அர்ப்பாட்டம் நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில் புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமட்டி தலைவர் V.முருகேசன் தலைமையில் தலைமையில் தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன் கண்டன உரை நிகழ்த்தினார். புதுக்கோட்டை வடக்கு செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் நிறைவுரையாற்றினார். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
