ராணிப்பேட்டையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!!

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!!
X
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் பாபு, பொருளாளர் உதயகுமார், பொன் வேதமுத்து, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தணிகையாளர் மோகன் துவக்க உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜெயக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அவர் பேசும் போது, ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைகள், துறை ரீதியான விசாரணைகள் ஆகிய அனைத்தையும் அரசு நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடித்திட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஓய்வு பெறும் நாளில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான சம ஊதியம் வழங்கிட வேண்டும். காலமுறை ஊதியத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். அரசுத்துறை மற்றும் ஊராட்சி பணி ஓய்வூதியர்கள், ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கிட வேண்டும். ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்களுக்கு உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை இயக்கம் சார்பில் தனி செயலி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். இந்தப் போராட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் சுந்தரேசன், எழில் இளவழுதி, புஷ்பராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்டப் பொருளாளர் சந்திரசேகர், மாவட்டத் தலைவர் ஜோசப்கெனடி லியோபால், நிர்மல் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கோட்ட நிர்வாகிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியாளர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Next Story